சித்தா படம் ப்ரோமோஷனில் மேடையில் கண்கலங்கி நடிகர் சித்தார்த் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம்கொண்டவர். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா.

இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது.

Advertisement

சித்தா படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படம் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகி ஐந்து நாட்களிலேயே 13 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் ப்ரமோஷன் பணிகளில் சித்தாத் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பெங்களூரில் சித்தா படத்திற்கான ப்ரோமோஷனில் கலந்து கொண்டிருந்தார். அங்கு கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பிரஸ்மீட்டிற்குள் நுழைந்து சித்தார்த்தை மிரட்டி இருக்கின்றனர்.

கன்னட அமைப்பு செய்த வேலை:

இருந்தாலும், முதலில் சித்தார்த் கண்டுகொள்ளாமல் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று கோஷமிட்டு சித்தார்த்தை தொடர்ந்து வெளியேறுமாறு மிரட்டி இருக்கின்றனர். இதனால் சித்தார்த் அங்கிருந்து வெளியேறி இருந்தார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி இருந்தது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் மன்னிப்பு கேட்டு பதிவு போட்டிருந்தார்கள்.

Advertisement

ஆந்திராவில் சித்தார்த்:

இதன் மூலம் இந்த படத்திற்கு பெரிய பிரமோஷன் கிடைத்தது என்று சொல்லலாம். இந்த நிலையில் சித்தா திரைப்படம் ஆந்திராவில் வருகிற ஆறாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அது தொடர்பான ப்ரோமோஷன் பணிகளில் நடிகர் சித்தார்த் பேசி இருக்கிறார். அப்போது அவர் கண்கலங்கி, தமிழில் பிரபல ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்த படத்தின் வெளியீடு உரிமை வாங்கி தமிழ்நாட்டில் படத்தை வெளியிட்டது. கேரளாவில் கோகுலம் கோபாலன் என்பவர் இந்த படத்தை வெளியிட்டார். அதோடு அவர் தன்னுடைய 55 வருட பயணத்தில் இப்படி ஒரு படத்தை பார்த்ததில்லை என்று கூறி உரிமையை வாங்கி வெளியிட்டார்.

Advertisement

மேடையில் கண்கலங்கிய சித்தார்த்:

கர்நாடகாவில் கேஜிஎப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்லே தயாரிப்பு நிறுவனம் இந்த படம் பிடித்திருந்தது என்று கூறி படத்தை வாங்கி வெளியிட்டது. ஆனால், தெலுங்கில் சித்தார்த் படத்தை யார் பார்ப்பார்கள் என்று கேட்டார்கள். அவர்கள் எல்லா கதவையும் மூடிவிட்டனர். பின் ஏசியன் சுனில் மட்டுமே இந்த படத்தை வெளியிட முன் வந்தார். இந்தப் படத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் தெலுங்கு பார்வையாளர்களை தவிர்த்து விடுவேன் என்று வேதனையுடன் பேசி இருந்தார்.

Advertisement