‘மிஸ் யூ’ படம் சித்தார்த்துக்கு கைகொடுத்ததா? எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
164
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சித்தார்த் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த சித்தா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது இவர் மிஸ் யூ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சித்தார்த்துடன் ஆஷிகா ரங்கநாத், பாலசரவணன், கருணாகரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சித்தார்த் அமைச்சர் மகன் மீது கேஸ் கொடுக்கிறார். ஆனால், அமைச்சர் எவ்வளவு எடுத்துப் பேசியும் சித்தார்த் கேசை வாபஸ் வாங்கவே இல்லை. இதனால் சித்தார்த்தை கொலை செய்ய முயற்சி செய்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக சித்தார்த்துக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிறது. இதனால் கடந்த இரண்டு வருடம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையுமே சித்தார்த் மறந்து விடுகிறார்.

- Advertisement -

அந்த சமயத்தில் தான் கருணாகரனுடைய அறிமுகம் சித்தார்த்துக்கு கிடைத்தது. இருவரும் நல்ல நண்பர்களாக மாறி பெங்களூரு செல்கிறார்கள். அங்கு ஆசிகாவை பார்த்ததும் சித்தார்த் காதலிக்கிறார். ஆனால், அவர் சித்தார்த்துடைய காதலை மறுத்து விடுகிறார். அதற்குப் பின் சித்தார்த் தன்னுடைய பெற்றோர்களிடம் சொல்லி ஆஷிகாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று வீட்டிற்கு வருகிறார்.

அப்போது தான் சித்தார்த்துடைய மனைவி ஆஷிகா என்பது தெரிய வருகிறது. இவர் மனைவியை மறந்து விடுகிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? சித்தார்த் என்ன செய்வார்? இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை. நீண்ட இடைவேளைக்கு பிறகு சித்தார்த் இந்த படத்தில் ரொமான்ஸ் ரோலில் நடித்திருக்கிறார். அதிலும் துறுதுறுவென இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் தனக்கு கொடுத்த வேலையை சித்தார்த் சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். இவரை அடுத்து ஹீரோயினியாக வரும் ஆஷிகாவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவருக்கு இனி படங்கள் வாய்ப்பும் குவியும். அந்த அளவிற்கு நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருக்கிறது.

மேலும், படம் ஆரம்பத்தில் சீரியஸாக தொடங்கினாலும் இறுதியில் காதலில் முடிவடைகிறது. ஆனால், ஆங்காங்கே சில தடுமாற்றம் வருவதால் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. சில பில்டப் காட்சிகள் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. ஆனால், பாடல்கள் பெரிதாக கவரவில்லை. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக மிஸ் யூ இருக்கிறது.

நிறை:

சித்தார்த், ஆசிகாவின் நடிப்பு சிறப்பு

கதைக்களம் நன்றாக இருக்கிறது

ஒன் லைன் காமெடி வசனங்கள், காதல் காட்சிகள் அருமை

ஒளிப்பதிவு பின்னணி இசை நன்றாக இருக்கிறது

குறை:

கதைக்களம் கொண்டு சென்றதில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கலாம்

பாடல்கள் பெரிதாக கவரவில்லை

சில காட்சிகள் சலிப்படைய வைத்திருக்கிறது

இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் மிஸ் யூ படம் – டைம் பாஸ்

Advertisement