ரகசிய நிச்சயதார்த்தம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகர் சித்தார்த் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் சமூக வளைத்தளத்திலும் ட்ரெண்டிங்கான நபர் தான். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி இருக்கிறார். இது குறித்து இவர் மீது பல விமர்சனங்கள் வந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் பிரபல நடிகை அதிதியை திருமணம் செய்ய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிதி ராவ் ஹைதாரி திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின் இவர் செக்க சிவந்த வானம், சைக்கோ உட்பட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதிதி ராவ் ஹைதாரி நடிக்கும் படங்கள்:
அதுமட்டும் இல்லாமல் இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நடன மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் வெளியாகி இருந்த ஹே சினாமிகா படத்தில் அதிதி ராவ் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், சமீப காலமாக மும்பையில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்கள். அதோடு அடிக்கடி இருவரும் டேட்டிங் சென்று வருவதையும் வாடிக்கையாக வைத்து வந்தனர்.
சித்தார்த் – அதிதி ராவ் காதல்:
ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்று எல்லாம் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் எதற்கும் வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயம் முடிந்துவிட்டதாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதிதி. இதில் இருவருமே கையில் மோதிரம் அணிந்தும் இருக்கின்றனர். ஆனால், இது குறித்து அவர்கள் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. பலரும் ஏன் ரகசிய நிச்சயதார்த்தம் என்று கேட்டு இருந்தார்கள்.
நிச்சயதார்த்தம் குறித்து சித்தார்த் சொன்னது:
இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சித்தார்த், நாங்கள் நிச்சயதார்த்தத்தை ரகசியமாக செய்ததாக கூறியிருக்கிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் தனிப்பட்ட முறையில் செய்திருக்கோம். இதில் என்ன ரகசியம்? ரகசியத்திற்கு தனிப்பட்ட விஷயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் அழைக்காதவர்கள் இது ஒரு ரகசியம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அங்கிருந்தவர்களுக்கு அது தனிப்பட்ட விஷயம் என்று தெரியும். திருமணம் தேதி இரு குடும்பத்தினுடைய முடிவு தான். இது எங்களுடைய படப்பிடிப்பு மாதிரி நாங்கள் முடிவு பண்ண முடியாது என்று கூறியிருந்தார்.