போலீஸ் பாதுகாப்பு அளிக்க முன் வந்தும் அதை மறுத்துள்ள சித்தார்த் – காரணத்தை கேட்டால் மறுபடியும் பாராட்டுவீங்க.

0
2162
sid
- Advertisement -

தனக்கு வந்த கொலை மிரட்டல் பற்றி புகார் அளித்த சித்தார்த்திற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பட்ட நிலையில் அதனை நிராகரித்துளளார் சித்தார்த். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமூக வலைதளத்தில் கடந்த சில காலமாகவே மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார். அதிலும் சமீபத்தில் உத்தரப்பிரதேசச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அரை விழும் என்று சித்தார்த் செய்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுதும் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டுப்பாடு ஏற்பட்டது. அதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது. அம்மாநிலத்தில் ஏராளமானோர் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காதது உள்ளிட்டவைகளால் உயிரிழந்து வருகின்றனர்.இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை என்று தவறான தகவல்களை தரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் பாருங்க : அந்த படத்தை பார்த்துட்டு நாம இருவரும் படம் பண்ணலாம்னு சொன்னேன், அவரும் கதை சொன்னார். ஆனால் – கே வி ஆனந்த் குறித்து ரஜினி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பொய் சொன்னால் அறை விழும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நடிகர் சித்தார்த் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர், சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவால் பா ஜ கவினர் சித்தார்த்தை திட்டி தீர்த்து வந்தனர்.

இந்த நிலையில், தனது தொலைபேசி எண்ணை தமிழக பாஜகவினர் பரப்பி வருகின்றனர் என்று நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல்கள் என 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 அழைப்புகளுக்கு மேல் வந்துவிட்டது. தமிழக பாஜகவின் ஐ.டி. பிரிவு, என்னுடைய தொலைபேசி எண்ணை வெளியிட்டதால் இந்த அழைப்புகள் வந்துள்ளன. என்னவானாலும், நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை” என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

சித்தார்த் அளித்த புகாரின் பெயரில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், அதனை மறுத்துள்ளார் சித்தார்த். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு அளிக்கும் தமிழ்நாடு போலீஸ்க்கு நன்றி. என் குடும்ப வரலாற்றில் நான் தான் முதல் முறையாக இப்படிகாவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்படுகிறேன்எனினும் இந்த தனியுரிமையை நான் விட்டுக் கொடுக்கிறேன். காவல் அதிகாரிகள் இந்த நோய்க்காலத்தில் வேறு நல்ல விடயங்களுக்காக பயன்படுத்தப் படட்டும்” என குறிப்பிட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார். தன் அம்மா பயந்திருப்பதாகவும், அவருக்கு ஊக்கம் தருவதற்காக மக்கள் சிலரது ட்வீட்களை அவரிடம் படித்துக் காண்பித்ததாகவும் குறிப்பிட்டு நன்றி சொன்ன சித்தார்த்,  “எளிமையான பின்னணியில் உள்ள சாதாரண மனிதர்கள் தான் நாங்கள். உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு உலகம் போன்றது” என தெரிவித்துளார். 

Advertisement