தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும் இவர் சமூக வளைத்தளத்திலும் ட்ரெண்டிங்கான ஒரு நபர் தான்.
அதிலும் சமீப காலமாகவே மோடி பற்றி ட்வீட் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் தனக்கு கொலை மிரட்டல்கள் கூட வந்தது என்று போலீசில் கூட புகார் அளித்து இருந்தார் சித்தார்த். இதனால் இவருக்கு பாதுகாப்பு அளிக்கவும் போலீசார் உத்தரவிட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்டார். சமூக வலைதளத்தில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துவிடுவார் சித்தார்த்.
இதையும் பாருங்க : கர்ப்பமா இருக்கேன், டயர்டா இருக்கு, ஆனாலும் போகணும் சௌந்தர்யா பேசிய கடைசி கால். அவரை அறிமுகம் செய்த ரஜினி பட இயக்குனர் உருக்கம்.
இப்படி ஒரு நிலையில் வயதான ஹீரோக்கள் இளம் நடிகைகளுடன் நடிப்பது குறித்த விவாதத்தில் தன் பெயரை இழுத்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘அசுரன்’ திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீ – மேக் ஆகி இருக்கிறது. அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி தாணுவே இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு மணிசர்மா இசை அமைக்கிறார்.
மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி அவர்கள் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மட்டும் பாடல்கள் வெளியாகி இருந்தது. அதில் தமிழில் பிளாஸ் பேக் காட்சியில்இளம் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அம்மு அபிராமி தான் இந்த படத்திலும் அம்மு அபிராமி தான் நடித்து இருக்கிறார். 21 வயதாக அம்மு அபிராமி 60 வயது வெங்கடேஷுக்கு ஜோடியா என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர், இதுகுறித்து ட்வீட் போட அதற்கு இன்னொரு ரசிகரோ, 40 வயது சித்தார்த், 20 வயது நடிகைக்கு ஜோடியாக நடிப்பதில் மட்டும் என்ன லாஜிக் இருக்கிறது என்று பதிவிட்டு சித்தார்த்தையும் டேக் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சித்தார்த், இந்த ஹீரோ வயசு விவகாரத்தில் நான் எப்படி உனக்கு ஞாபகம் வந்தேன். என்ன டேக் வேற பண்ணி இருக்க ? சூப்பரா தரித்திரம். எங்க இருந்துடா வரீங்க நீங்க எல்லாம் என்று கூறியுள்ளார்.