நடிகர் அல்லு அர்ஜுனை விமர்சித்து சித்தார்த் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்து இருக்கின்றது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த புஸ்பா படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது.
இயக்குனர் சுகுமார் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார் . இந்த படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. தற்போது இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் வெளியாகி இருக்கிறது.
பான் இந்தியா படமாக வெளியாகி இருக்கும் புஷ்பா 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
புஷ்பா 2 படம்:
அதுமட்டுமில்லாமல் புஷ்பா 2 படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து இருக்கிறது. காரணம், புஷ்பா 2 படம் வெளியாகுவதற்கு முன்பு பிரீமியர் ஷோ ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் போடப்பட்டிருந்தது. அந்த தியேட்டருக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன் திடீரென்று சென்றிருந்தார்கள். இதனால் உற்சாகத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.
சித்தார்த் பேட்டி:
இந்த கூட்ட நெரிசலில் 39 வயது உடைய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இதனால் தான் அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் புஷ்பா 2 படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுன் குறித்து நடிகர் சித்தார்த் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சித்தார்த்திடம், பாட்னாவில் அல்லு அர்ஜுனாவை பார்க்க மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியிருந்தது.
அல்லு அர்ஜுன் குறித்து சொன்னது:
இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு சித்தார்த், கூட்டம் கூடுவதெல்லாம் ஒரு விஷயமா. இந்தியாவில் ஜேசிபி கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடும். பீகாரில் கூட்டம் கூடுவது அவ்ளோ பெரிய விஷயம் கிடையாது. இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தம் கிடையாது. அப்படி பார்த்தால் எல்லா அரசியல் கட்சியும் ஜெயித்து கொண்டு தானே இருக்க வேண்டும். எல்லோருக்குமே கூட்டம் இருக்கிறது. பிரியாணி, குவாட்டர் பாட்டில் என அதை சொல்லணும் என்று பேசி இருக்கிறார்.
சித்தார்த் குறித்த தகவல்:
இப்படி சித்தார்த் பேசியிருந்ததற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தும் சித்தார்த்தை விமர்சித்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ் யூ.