உங்கள் காதலர் கல்லூரி வாசல் பிரசாந்த் மாதிரி இருக்கார். சனா கான் புகைப்படத்திற்கு கமன்ட் செய்த ரசிகர்.

0
37809
sna

நடிகை சனா கான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். பின்னர் தான் திரைத்துறைக்கு வந்தார். இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் முதலில் தனது தொழில் வாழ்க்கையை விளம்பரப் படங்களில் நடித்துத் தான் தொடங்கினார். தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு பரத் நடிப்பில் வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு’ போன்று சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் தமிழில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படியே பாலிவுட் பக்கம் சென்று செட்டிலாகி விட்டார் நடிகை சனா.

Image result for sana khan

சமீபத்தில் கூட இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சனாகான். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் அதிக வாய்ப்புக்கள் தேடி வராததால் சொந்தமாக ஒரு சிறு சோப்பு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சனாகான் அவர்கள் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கு பதிலளிக்காமல் இருவரும் மவுனம் காத்து வந்தார்கள். பின் நடிகை சனாகான் அவர்கள் மெர்வின் லூயிஸின் பிறந்தநாளன்று அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய காதலை உறுதி செய்து உள்ளார்.

- Advertisement -

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சனாகான் அவர்கள் பதிவிட்டது, “உன்னைச் சந்திக்கும் வரை யாரையும் என்னால் இவ்வளவு நேசிக்க முடியும் என்பது எனக்கே தெரியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நான் உனக்காக உருகுகிறேன். உன்னிடமிருந்து ஒவ்வொரு நாளும் நிறைய நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். உன் மீது எனக்கிருக்கும் அன்பை விவரிக்க வார்த்தைகள் போதாது. என் வாழ்வில் நீ இருப்பது என் பெரிய அதிர்ஷ்டம். என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. எப்போதும் உன்னைக் காதலிக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறி இருந்தார்.

தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்படியே சானாகான் காதலர் பார்ப்பதற்கு கல்லூரி வாசல் பிரசாந்த் மாதிரியே உள்ளார் என்றும் கூறிவருகிறார்கள். 1996 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் “கல்லூரி வாசல்”. இந்த படத்தில் பிரசாந்த், அஜித்குமார், பூஜா பட் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் பிரசாந்த் இருக்கும் கெட்டப்பில் அப்படியே சானாகான் காதலர் உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement