ஆடுவார், நடிப்பாருன்னு தெரியும். பாடவும் செய்வாரா – யாரும் பார்த்திடாத சில்க் ஸ்மிதாவின் வீடியோ

0
1083
silk
- Advertisement -

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு வசீகரமான முகம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சில்க். இவருடைய இயற்பெயர் விஜயலஷ்மி. இவர் சினிமா துறையில் 1970களில் ஒப்பனைக் கலைஞராக தான் தன் வாழ்க்கையை தொடங்கினார். பின் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியின் ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு நடிகையாக சில்க் அறிமுகமானார். இந்த படத்தில் சில்க் என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

இதனால் தான் இவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது. இதனை தொடர்ந்து இவர் சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்தார். மேலும், இவர் ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு இப்படி ஒரு நடிகையும் இருப்பாரா! என்று அன்றைய கால பிரபலங்களும், மக்களும் விரும்பி வியந்து பார்க்க வைத்த நடிகை சில்க்.

- Advertisement -

சில்க் ஸ்மிதா திரை பயணம்:

இவர் கவர்ச்சிக்கு பெயர் போனாலும் நடிப்பு, நடனம் என பல திறமைகளை காட்டியவர். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக இவர் பல விருதுகளை வாங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பல நடிகைகள் இவருடைய நடிப்பை கண்டு வியந்து பாராட்டி இருக்கிறார்கள். பின் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளாலும் , குடி பழக்கத்தினாலும் மன அழுத்தத்திற்கு ஆளானார்.

சில்க் ஸ்மிதா தற்கொலை:

இதனால் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த உலகை விட்டு சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை படமாக எடுப்பதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் யாரும் பார்த்திராத வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் உலா வரும் சில்க் ஸ்மிதா தகவல்:

சமீப காலமாகவே நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பல தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் கூட இவருடைய இறப்பு குறித்தும், இறப்புக்கு முன் நடந்த நிகழ்வு குறித்தும் பல விஷயங்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இன்னும் இவருடைய தற்கொலைக்கு முழுமையான காரணம் என்ன என்பது பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவரை போலவே அச்சு அசலாக இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில்க் ஸ்மிதா இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் சில்க் ஸ்மிதா பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

யாரும் பார்த்திராத சில்க் ஸ்மிதா வீடியோ:

அந்த வகையில் தற்போது யாரும் பார்த்திராத சில்க் ஸ்மிதா உடைய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், சில்க் ஸ்மிதா அவர்கள் பொது மேடை விழா ஒன்றில் மலேசியா வாசுதேவன் உடன் சேர்ந்து பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இவர் நடனமாடுவார், நடிப்பார் என்று பலருக்கும் தெரியும். ஆனால், இவர் பாட்டு பாடுவார் என்பது பலருக்கும் தெரியாது. தற்போது இவரின் பாட்டு பாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பலரும் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement