தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி துவங்கி பேபி அனிகா வரை பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் கலக்கி உள்ளார்கள். அப்படி படங்களில் நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த முகங்கள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்தும் விட்டார்கள். அதிலும் அவர்கள் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களை பார்க்கும் போது அந்த குழந்தையா இப்படி எல்லாம் போஸ் கொடுப்பது என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷரியா ஷர்மா.
இவர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். தனது மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீயா. இவர் 2005-ம் ஆண்டு சிரஞ்சீவி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்து இருந்தார்.
இந்த படத்தில் இவரது நடிப்பை கண்டு பலரும் பிரமித்து போனார்கள். அந்த படத்தை தொடர்ந்து நடிகை ஷரியா ஷர்மா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
அதற்கு பின் நடிகை ஷரியா ஷர்மா தெலுங்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயாகுடு’ என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். அந்த படத்தை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். பிறகு நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர் நடிப்புக்கு அப்ளாஸ் குவிந்தது. தற்போது இவர் மும்பையில் சட்டம் படித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஷ்ரியா சர்மா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரை பார்த்தால் அடையாளம் தெரியாத அளவிற்கு கொழுக் மொழுக் என்று மாறி உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஜில்லுனு ஒரு காதல் குழந்தையா இது ??? என்று ஆச்சர்யத்துடன் கேட்டு வருகிறார்கள். ஏன்னா, நடிகை ஷ்ரியா சர்மா அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.
மேலும், நடிகை ஷ்ரியா சர்மா அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி போட்டோ ஷுட்டுகளை பண்ணுவார். பின் அந்த போட்டோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியிடுவார். சமீபத்தில் கூட இவர் சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை போட்டிருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பிய இருந்தது.