அந்த படத்துல ஓட முடியலன்னு அழுதேன். ஆனா, இதுல என் ஸ்பீட கார்ல பாலோ பண்ணி ஷூட் பண்ணாங்க. சிம்புவின் Confidence வீடியோ

0
331
Str
- Advertisement -

தன் முந்தய படத்திற்கும் மாநாடு படத்தின் போதும் இருந்த தன்னுடைய பிட்னஸ் குறித்து சிம்பு பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சர்ச்சை நாயகன் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சிம்பு தான். அந்த அளவிற்கு அவரை குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வலம் வரும். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மேலும், ரொம்ப காலமாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாநாடு படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இடையில் சிம்பு உடல் எடை கூடி படு குண்டாக மாறி இருந்தார். பின்னர் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு படு ஸ்லிம் தோற்றத்திற்கு மாறினார். இப்படி ஒரு நிலையில் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிம்பு, செக்க சிவந்த வானம் படத்தின் ஒரு காட்சியில் ஓடிய போது தன்னால் ஓடவே முடியவில்லை. கால் எல்லாம் வலித்தது.

அப்போது நான் நாம்மால் ஓட கூட முடியவில்லையே என்று பயங்கரமாக அழுதேன். ஆனால், மாநாடு படத்தில் நான் ஓடும் காட்சியில் எனக்கு ஈடு கொடுக்க முடியாமல் காரில் ஷூட் செய்தனர். அன்னிக்கி அவ்ளோ கஷ்டத்திலும் நான் என்னை நம்பினேன். அதை எண்ணி நான் சந்தோசப்படுகிறேன் என்று கூறிஇருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement