படு நெருக்கமாக சிம்பு – சமந்தா நடத்திய Throwback போட்டோ ஷூட் (இவங்க தான் ஜோடியா நடிக்கவே இல்லையே அப்புறம் எப்படி)

0
3204
simbu

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பட்டைய கிளப்புகிறார். இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் சிம்பு உடன் ஸ்லீவ்லெஸ் உடையில் அதுவும் ரொமான்ஸ் செய்வது போல புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படத்தில் நடிகை சமந்தா அவர்கள் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க முதலில் கமிட்டானார். இவர்கள் இருவரையும் வைத்து போட்டோ ஷூட் நடந்தது. பின் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற தாமதம் ஆனது. இதனால் நடிகை சமந்தா அவர்கள் இந்த படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கும் தமிழக மக்கள் – ஸ்டாலின் வெற்றி குறித்து மாரி செல்வராஜ்.

- Advertisement -

அதற்குப் பிறகு தான் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை மஞ்சுமா மோகன் நடித்தார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இந்த புகைப்படத்தில் சமந்தா அவர்கள் மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளார். நடிகர் சிம்புவும் பார்ப்பதற்கு மிக எங் லுக்கில் தாடி மீசை இல்லாமல் செம ஸ்டைலிஸ் ஆக உள்ளார்.

Samantha With STR | சினிமா செய்திகள் | Cinema News | Kollywood

சமந்தா இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே 2010 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சமந்தாவின் கணவன் நாகசைதன்யாவும் நடித்து இருந்தார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement