ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கும் தமிழக மக்கள் – ஸ்டாலின் வெற்றி குறித்து மாரி செல்வராஜ்.

0
645
stalin
- Advertisement -

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி நேற்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது. இதில் ஆரம்பம் முதலே பல்வேறு தொகுதிகளில் தி மு க தான் முன்னிலை வகித்து வந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது.

இதையும் பாருங்க : அச்சு அசலாக சிறு வயது ரோஜா போலவே இருக்கும் அவரது மகள் – இதோ புகைப்படம்.

- Advertisement -

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இலயோலா கல்லூரி வளாகத்தில் பெற்றுக் கொண்டு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். முதன் முறையாக முதலமைச்சராக பதிவு ஏற்கப்போகும் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

FC Disruptors - Mari Selvaraj | Film Companion

அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கும் தமிழக மக்களுக்கு அன்பும் நன்றியும். தமிழகத்தின் நம்பிக்கை முதல்வராக பொறுப்பேற்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement