சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் கடந்த 1 ஆம் தேதி வெளியாகியிருந்ததது.இந்நிலையில் நடிகர் சிம்பு தனது 35 -வது பிறந்தநாளை இன்று தனது திரையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஒரு விடுதியில் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நட்சத்திர நண்பர்கள் சூழ நடைபெற்றது. சிம்பு தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினிமா நண்பர்களைக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார். இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்லாமல் இந்த வாரம் வெளியான `வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும் அமைந்தது.
இந்தப் பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, மஹத், ஹரீஷ் கல்யான் எனப் பலர் கலந்து கொண்டனர். நடிகைகள் யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். எஸ்.டி.ஆர் என எழுதப்பட்டிருந்த கேக்கை சிம்பு வெட்டி யுவன், தனுஷ் உள்ளிட்டவர்களுக்கு ஊட்டினார். இந்த வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்