2.5 மாதத்தில் 15 கிலோவை குறைந்துள்ள சிம்பு – சமூக வலைதளத்தில் வெளியிட்ட முதல் வீடியோ இதோ.

0
48544
simbu

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மாநாடு படம் மீண்டும் துவங்கியது. பின்னர் கொரோனா பிரச்சனை காரணமாக மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து வந்தார்.

- Advertisement -

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவின் சில புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் இணைந்துள்ளார் சிம்பு. இன்று காலை சமூக வலைதளத்தில் இணைந்த சிம்பு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கடுமையான உடற் பயிற்சிகளை செய்து தனது உடல் எடை குறைக்க அவர் பட்ட கஷ்டங்களை காண்பித்துள்ளார்.

https://www.instagram.com/p/CGkn2x8BhXS/?igshid=1ffyu9zdkd6bm

இப்படி ஒரு நிலையில் சிம்புவின் ஜிம் ட்ரைனர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், மன்மதனின் இருந்த சிம்பு, அத விட செமயா இருப்பாரு. கிட்ட தட்ட இரண்டரை மாதத்தில் 15 கிலோவை குறைத்துள்ளார். செமயா இருக்காரு. லுக்கு மட்டும் அடுத்த மாதம் வந்திச்சின ஒட்டு மொத்த தமிழ் நாடும் அவ்வளவு தான் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement