கேட்ச் விட்ட நடிகர் – காட்டு கத்து கத்திய சிம்பு. இந்த வீடியோ நியாபகம் இருக்கா ?

0
1202
simbhu
- Advertisement -

தமிழ்த் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிம்பு. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான “விண்ணைத் தாண்டி வருவாயா” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும், இந்த படத்தின் 2ம் பாகம் போன்று ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் மட்டும் இதில் நடித்துள்ளனர். இந்த குறும்படம் கார்த்திக் 10 வருடங்களுக்கு பிறகு ஜெஸ்ஸி-யிடம் பேசுவது போன்று எடுக்கப்பட்டுள்ளது. 12 நிமிடத்துக்குள் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இந்த ஷாட் பிலிம் தற்போது யூடியூப் தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு விளையாடிய கிரிக்கெட் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நடிகர் சிம்புவுக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சில வருடங்களுக்கு முன்பு சினிமா நட்சத்திரங்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டில் சிம்பு கலந்து கொண்டார். அந்த கிரிக்கெட் விளையாட்டு சேப்பாக்கத்தில் உள்ள MAC மைதானத்தில் நடந்தது. இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் போது சிம்பு அவர்கள் நடிகர் சாந்தனு மீது கோபப்பட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

சிம்புவின் ஓவரின் போது சிம்பு பந்து வீசினார். பின் அந்த பந்து கேட்ச்க்கு வந்தது. அப்போது சிம்பு அந்த பந்தை பிடிக்க சென்றார்.உடனே மறுபக்கம் சாந்தனுவும் அந்த பந்தை பிடிக்க சென்றார். பின் இருவரும் மோதியதால் அந்த கேட்ச் விடப்பட்டது. இதனால் சிம்புவுக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது சிம்பு அவர்கள் மகா, மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement