‘தாடி எடுத்ததுக்கு அப்புறம் தான முகமே தெரியுது’ படு யங் லுக்கில் சிம்பு – சமைத்து கொண்டே வெளியிட்ட வீடியோ.

0
1584
simbu
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

-விளம்பரம்-

இந்த இரண்டு படங்களிலும் நடிகர் சிம்பு உடல் எடை கூடி இருந்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார் சிம்பு. இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு பின்னர் ஒரு சில மாதங்களிலேயே 70 கிலோவிற்கு மேல் குறைத்து படு ஸ்லிம் தோற்றத்துக்கு திரும்பினார்.

- Advertisement -

குண்டாக இருந்த போது ஒரு நாளைக்கு சிம்பு அவரே சமைத்து 5 பிரியாணி சாப்பிட்டதாக அவருடைய பயிற்சியாளர் கூறி இருந்தார். அதே போல உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்ததும் குடிப் பழக்கத்தையும் நிறுத்திவிட்டார் சிம்பு. இப்படி ஒரு நிலையில் தான் குடிப்பழக்கத்தை விட்டு ஓராண்டு ஆகிவிட்டது என்று சிம்புவே கூறி இருந்தார். அதிலும் பிரேம்ஜி  போன்றோர் உடன் இருந்தும் கூட குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம் என நகைச்சுவையாக கூறி இருந்தார் சிம்பு.

இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு வீட்டில் சமையல் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள சிம்பு, லாக் டவுன் என்பதால் தாடியை எடுத்துவிட்டேன், இப்போதான் முகமே தெரியுது என்று கூறியுள்ளார். தாடி இல்லாமல் தற்போது மீண்டும் படு யங் லுக்கில் திரும்பியுள்ள சிம்புவை கண்டு ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்து உள்ளனர். மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement