இணையத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் – படு ஸ்லிம் சிம்புவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
1267
simbhu
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மாநாடு படம் மீண்டும் துவங்கியது. பின்னர் கொரோனா பிரச்சனை காரணமாக மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து வந்தார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவின் சில புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் இணைந்து இருந்தார். சமூக வலைதளத்தில் இணைந்த சிம்பு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் கடுமையான உடற் பயிற்சிகளை செய்து தனது உடல் எடை குறைக்க அவர் பட்ட கஷ்டங்களை காண்பித்து இருந்தார்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க மாநாடு படம் முடிவதற்குள் சுசீந்திரன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது. ஈஸ்வரன் என்று வைக்கப்பட்டுள்ள இந்த படம் கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. இத்தனை நாள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் கூட வெளியில் கசியாமல் பார்த்துக் கொண்டது படக்குழு. இப்படி ஒரு நிலையில்  ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில், படு ஸ்லிம்மாக ஆடையலாம் தெரியாத அளவு மாறியுள்ளார் சிம்பு.

-விளம்பரம்-
Advertisement