சிம்புவின் மாநாடு படத்தின் கதாநாயகி இவரா.! வெளியான புதிய தகவல்.!

0
374
Manadu

கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு செக்க சிவந்த வானம் படத்திற்கு பின்னர் வரிசையாக படத்தில் நடித்து வருகிறார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்றபடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வரும் சிம்பு மும்மரமாக படபிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த படத்தை பொங்கல் பண்டிகையன்று வெளியிட வேண்டும் படத்தை மும்மரமாக இருந்தார் சிம்பு. ஆனால், எதிர்பாராத விதமாக பொங்கலுக்கு சிம்பு படம் வெளியிடபட இயலவில்லை.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள ‘மாநாடு’ படத்தில் நடிகை ரஷி கண்ணா சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற சில தகவல்கள் வெளியகியுள்ளது. இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகைரஷி கண்ணா.

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்கமறு’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் ரசி கண்ணா தான் மாநாடு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.