தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சார்மி கவுர். இவர் தனது 15 வயதிலேயே படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு நீ நடித்து காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகம் ஆனார். தமிழில் டி ஆர் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சார்மி. அதனை தொடர்ந்து ஆஹா அப்படித்தான், லாடம் ஆகிய சில படங்களில் நடித்தார்.
ஆனால், தமிழில் இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இருந்தாலும் இவர் தெலுங்கு மொழியில் தான் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சமீப காலமாக நடிகை சார்மி அவர்கள் படங்களில் நடிப்பது இல்லை. தற்போது இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தயாரிப்பு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராகவும் , தயாரிப்பாளாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருபவர் பூரி ஜெகன்நாத். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது.
சமீப காலமாக நடிகை சார்மி அவர்கள் இயக்குனர் பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சார்மி அவர்கள் தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகை சார்மி அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும், இது குறித்து நடிகை சார்மி அவர்கள் தன் காதலர் பூரி ஜெகநாத் இடம் கூறியதாகவும், அதற்க்கு அவர் சார்மிக்கு ஸ்டோரி ரைட்டிங் என்ற புத்தகத்தை கொடுத்ததாகவும், அந்த புத்தகத்தை சார்மி படித்து கூடிய விரைவில் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆக மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை சார்மி சொன்னால் மட்டும் தான் தெரியும். ஆனால், நடிகை சார்மி இயக்குனர் ஆக அவதாரம் எடுக்கப்போகிறார் என்று சொன்னவுடன் ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். ஏற்கனவே நடிகை சார்மி பல படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.