சபரி மலையில் இருந்து திரும்பிய கையோடு கோர்ட்டுக்கு சென்ற சிம்பு. வீட்டுக்கு அனுப்பிய நீதிபதி.

0
16155
simbhu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சில வருடங்களுக்கு முன் சிம்பு நடித்த “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படம் குறித்து பல சர்ச்சைகள் தற்போது எழுந்து வருகிறது. மேலும், அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்கள் சிம்புவை அவதூறாக பேசியதாக சிம்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை நாயகனாக திகழ்பவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் கூட இவருடைய மாநாடு படம் குறித்து பல விமர்சனங்களும் கருத்துக்களும் வந்திருந்தது. இந்த பிரச்சனை முடிந்து சில நாட்கள் கூட ஆகவில்லை தற்போது இவரின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் பிரச்சனை எழுந்து உள்ளது.

-விளம்பரம்-
simbu

- Advertisement -

சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கினார். மைக்கேல் ராயப்பன் என்பவர் இந்த படத்தை தயாரித்து உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைத்தார். மேலும்,இந்த படத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா சரண், மஹத் ராகவேந்திரா, கணேஷ், மகேந்திரன் உள்ளிட்ட பல பேர் நடித்து உள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் ஆக்ஷன் தான். இந்தப் படத்தில் நடிக்க நடிகர் சிம்பு அவர்களுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : அஜித்துக்கும் உங்களுக்கும் எப்போதும் ஆகாதா. தொகுப்பாளர் கேட்ட கேள்விக்குக்கு விஜய் சொன்ன பதில்.

நடிகர் சிம்பு அவர்கள் முன்பணமாக 1.51 கோடி ரூபாயை வாங்கி இருந்தார். பின் மீதம் சம்பள பாக்கி 6.48 கோடி ரூபாய் தர வேண்டும். ஆனால், இன்னும் நடிகர் சிம்புவுக்கு சம்பள பாக்கியை தரவில்லை என்று நடிகர் சங்கத்தில் சிம்பு அவர்கள் புகார் மனு அளித்து அளித்து இருந்தார். அதே சமயம் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களும் சிம்பு நடித்த இந்தப் படத்தின் மூலம் எனக்கு பெரிய அளவு இழப்பு ஏற்பட்டு உள்ளது. நான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் கூறி உள்ளார். அதன் பின் இந்த இழப்பை சரி செய்ய நடிகர் சிம்புவிடம் வசூலித்துத் தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-
Image result for AAA சிம்பு

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்கள் நடிகர் சிம்புவை குறித்து அவதூறான வார்த்தைகளை பதிவிட்டார் என்று கூறி வருகிறார்கள். இதனால் மைக்கேல் ராயப்பன் அவர்கள் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நடிகர் சிம்பு அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் விசாரிக்கிறார். நடிகர் சங்கம் ,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரு சங்கங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை அரசு நியமித்து உள்ளது.

மேலும், நடிகர் விஷால் இந்த வழக்கில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதால் இரு சங்கங்களில் இருந்து தனித்தனி அதிகாரிகளை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இணைக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை வைத்து உள்ளார். இதனைக் கேட்ட நீதிபதி அவர்கள் மனுவை திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு அறிவுரை கூறியுள்ளார். பின்னர் இந்த விசாரணையை ஜனவரி 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளார்.

Advertisement