அஜித்துக்கும் உங்களுக்கும் எப்போதும் ஆகாதா. தொகுப்பாளர் கேட்ட கேள்விக்குக்கு விஜய் சொன்ன பதில்.

0
42447
vijay-ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த்– கமலஹாசனுக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். அதுமட்டும் இல்லாமல் தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். மேலும், இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். சமீபத்தில் கூட அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் திரையரங்குகளில் வெறித்தனமாக வசூல் செய்தது. இதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது “தளபதி 64” என்ற படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார். தல அஜித் அவர்களின் இந்த வருடம் வெளியான ‘விசுவாசம், நேர்கொண்ட பார்வை’ படமும் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது.

-விளம்பரம்-
Image result for Vijay ajith fight

- Advertisement -

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இவர்களுடைய படம் நல்ல வரவேற்பை பெற்றது.அதோடு தல அஜித் அவர்கள் தற்போது வலிமை என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர்கள் இருவரின் படமுமே அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியிடப்படும் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் ஒரு காலத்தில் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலக்கியவர் ஆனந்த கண்ணன். இவர் அண்மையில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்து உள்ளார். அதில் விஜய் மற்றும் அசின் பற்றி பேட்டி எடுத்ததை பற்றி பேசி இருந்தார். அப்போது அவரிடம் ஒரு கேள்வி கேட்டு உள்ளார்கள். அது என்னவென்றால் உங்களுக்கும், அஜித்துக்கும் எப்போதுமே ஆகாதா?? ஏன்?? என்று கேட்டார். அதற்கு விஜய் அவர்கள் சிரித்துக் கொண்டே ரொம்ப கூலாக எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ராம் பட நடிகை. வீடியோ இதோ.

உண்மையிலேயே சொல்லப்போனால் அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் தான். இவர்களுடைய ரசிகர்கள் தான் இவர்களை எதிரிகளாக பாவித்து விடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். முன் ஒரு காலத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக கொடிகட்டி பறந்தவர் ஆனந்த கண்ணன். இவர் சிங்கப்பூர் தமிழர் ஆவார். இவர் முதன் முதலாக சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்றில் தான் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதற்கு பின்னர் ரேடியோ ஜாக்கியாக தமிழகத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு சன் மியூசிக் சேனலில் விஜேவாக தேர்வு ஆனார். இதனை தொடர்ந்து அவர் டிவி சேனல்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

-விளம்பரம்-
Image result for anandha Kannan

பின் தமிழகம் முழுவதும் பிரபலமான தொகுப்பாளராக ஆனார். அதன் பின்னர் சன் டிவியிலும் ‘சிந்துபாத்’ என்ற தொடரில் கதாநாயனாக நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும்,இவர் ஒரு சில படங்களில் நடித்தார். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்பதால் மீண்டும் இவர் சிங்கப்பூருக்கே தன் குடும்பத்துடன் சென்று விட்டார் என்று கூறுகிறார்கள். தற்போது இவர் முதன் முதலாக தொகுப்பாளராக இருந்த வசந்தம் டிவியிலேயே மீண்டும் இணைந்து விட்டார் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement