பாம்பு பிடித்து சர்ச்சையில் சிக்கிய சிம்பு – இவரு எத புடிச்சாலும் பிரச்சனை ஆகிடுது பாவம்.

0
27024
simbhu

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார்.

சிம்பு

இந்த படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து வந்தார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவின் சில புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. இது ஒருபுறம் இருக்க நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சிம்புவின் உடல் எடை குறைந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள். சிம்புவின் உடல் எடை குறைப்பு குறித்து பேசிய அவரது ஜிம் பயிற்சியாளர், சிம்புவுக்கு பயிற்சி கொடுத்தது சற்று வித்தியாசமான அனுபவம். மற்றவர்கள் போல ஒரே பயிற்சியை அவர் திரும்ப திரும்ப செய்ய விரும்பவில்லை.

- Advertisement -

இவைத் தவிர்த்து அவர் விளையாடுவதிலும் கவனம் செலுத்தினார்.ஊரடங்கால் அவரின் எடை அதிகரித்து விட்டது. அதன் பின்னர் ஜீன் மாதம் மீண்டும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். கடினமாக பயிற்சி செய்து தற்போது 71.1 கிலோ எடை கொண்ட சிம்புவாக மாறி நிற்கிறார் என்று கூறியிருந்தார். இந்த உடல் எடை குறைக்கும் பயணத்தில் உடற்பயிற்சிகளை மட்டும் செய்யாமல் பல்வேறு விளையாட்டுகளிலும் நீச்சலும் ஈடுபட்டிருக்கிறார் சிம்பு. இப்படி ஒரு நிலையில் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகள் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இப்படி ஒரு நிலையில் தற்போது ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில், சிம்பு உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் போடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது.வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை சிம்பு மீறியிருப்பதால் அவர் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement