இந்தியன் 2 வில் இருந்து சிம்புவை அதிரடியாக நீக்கம்.! அவருக்கு பதில் இந்த நடிகர் தான்.!

0
773
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு சர்ச்சைக்கு குறைவில்லாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். கடந்த சில காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாத சிம்பு அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்னர் தற்போது மாநாடு, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதே போல நடிகர் சிம்பு , கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் என்று ஒரு செய்தி பரவியது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்துக்கு சிம்பு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இயக்குனர் ஷங்கரிடம் சிம்பு இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று லைகா நிறுவனம் கூறியதாகவும், அதற்கு ஷங்கர் யோசிக்காமல் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

siddarth

சிம்புவிற்குப் பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் சித்தார்த்தை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிம்பு நடிப்பது குறித்தே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement