பழைய காதல் நினைவுகள் குறித்தும் வருங்கால மனைவி குறித்தும் மனம் திறந்த சிம்பு – இப்படி ஒரு ஆசையாம்.

0
704
simbu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் சர்ச்சை நாயகன் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சிம்பு தான். அந்த அளவிற்கு அவரை குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கும். எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டு தான் வருகிறது. மேலும், தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார். நடுவில் சில படங்கள் தோல்வி அடைந்து இருந்தாலும் செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

-விளம்பரம்-

சிம்பு – நயன்தாரா :

அதிலும் சமீப காலமாக இவரது படங்கள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநாடு படமும் பல தடைகளை கடந்து வெளியாகினாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்து உள்ளது. மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, சிம்பு காதல் தோல்விகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சிம்பு- நயன் காதல் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள்.

- Advertisement -

சிம்பு – ஹன்சிகா :

அந்த அளவிற்கு அவர்கள் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் இவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். நயன்தாராவை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் ஹன்சிகாவை காதலித்து வந்தார். பின் இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்களும் பிரிந்து விட்டார்கள் என்று சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது.

Simbhu – Hansika Relationship Fake?

பழைய காதல் நினைவுகள் :

அதற்குப் பிறகு சிம்பு காதல் தோல்வியில் மனவேதனையில் படம் நடிக்காமல் இருந்தார். பின் மீண்டும் படங்களில் களமிறங்கி மிரட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சிம்பு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்மேல் அன்பில் இருந்தவர்கள் நிறைய பேர். நான் அன்பு வைத்த நபர்களும் நிறைய பேர். நினைவுகளை துரத்திக் கொண்டு போகவே கூடாது. எல்லாம் மறந்து விட்டது என்று என்னால் பொய் சொல்ல முடியாது.

-விளம்பரம்-

இமயமலை பயணம் :

அதில் இருந்து வெகுதூரம் நான் வந்துவிட்டேன். அதுதான் இமய மலைக்கு போயிட்டு வந்ததும் தொடச்சு விட்டா மாதிரி ஆகிவிட்டது. சின்ன வயதில் டவுசரை போட்டுட்டு சைக்கிள் ஓட்டி இருப்போம், ஆடி இருப்போம். அதெல்லாம் இப்ப நினைவுகள்தானே. அப்படிதான் வாழ்க்கையும் போகணும். அதுதான் நியாயம். இனி வருகிறவளுக்கு ஆறுதலாக, உதவியாக, துணையாக இருக்கனும். நினைத்த மாதிரி சின்ன சின்ன சண்டை போடனும். நினைத்த மாதிரி எந்த ஈகோவும் இல்லாமல் சேர்ந்து கொள்ளணும்.

வருங்கால துணை :

இனி இப்படித்தான் சிம்பு இருக்கப் போறான் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் அனைவரும் இவருடைய திருமணம் குறித்து கேட்டு வருகிறார்கள். மேலும், மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement