தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார்.

பின் பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்த சிம்பு நடித்த மாநாடு படம் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். தற்போது சிம்பு நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார்.
சிம்பு திரைப்பயணம்:
ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சிம்பு பேட்டி:
தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பேட்டியில் சிம்பு, என்னை பார்த்து பலருமே மணி சார் இயக்கும் படத்திற்கு மட்டும் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வந்து விடுவீர்களே, அவர் மீது என்ன பயமா? அவர் கண்டிப்பாக நடந்து கொள்வாரா? என்றெல்லாம் கேட்கிறார்கள். சத்தியமாக அவர் மீது பயம் எல்லாம் கிடையாது. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ஒரு நாள் கூட மணி சாரின் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததே கிடையாது.
ஷூட்டிங் நேரம் பற்றி சொன்னது:
சில நேரங்களில் மணி சார் வருவதற்கு முன்பே கூட நான் சென்றிருக்கிறேன். நாம் ஒரு நடிகர். தயாரிப்பாளரையோ இயக்குனரையோ நம்பி ஒரு படத்திற்குள் நடிக்க செல்லும் போது முதலில் சொன்ன நேரத்தில் படத்தை எடுக்க வேண்டும். முதலில் ஒரு இயக்குனர் நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் மற்ற நடிகர்களும் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவார்கள். கதையை சொன்ன பிறகு படப்பிடிப்பு தளத்தில் இப்படி செய்யலாமா? அப்படி செய்யலாமா? என்று யோசிக்கவே மாட்டார்.

மணிரத்தினம் பற்றி சொன்னது
அன்றைய படப்பிடிப்பில் என்ன விஷயங்கள் செய்யப்போகிறோம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். சொன்ன நேரத்திற்கு படத்தை முடித்து விடுவார். சம்பளமும் சரியாக வந்துவிடும். படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும். இவ்வளவு விஷயங்களையும் மணி சார் தவறாமல் இத்தனை வருடங்களாக செய்து கொண்டிருக்கிறார். எந்த நடிகர் அவருடைய படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவார்கள் என்று கூறியிருக்கிறார்.






