வல்லவன் பட பிரச்னை.! பொது நிகழ்ச்சியில் சிம்பு கன்னத்தில் அறைந்த கலைஞர்.! வெளிவந்த ரகசியம்.!

0
47
Kalainjar
- Advertisement -

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்களுக்கும் தமிழ் சினிமா துறைக்கும் ஒரு நெருங்கிய தொடரப்பு இருந்தது என்றே கூறலாம். அவரது மறைவிற்கு பின்னர் பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் கலைஞர் அவர்களுடன் உண்டான தொடர்பு குறித்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிம்பு கலைஞருடன் இருந்த நெருக்கத்தை பெற்றி கூறியுள்ளார்.

Simbu-Actor

கலைஞர் அவர்கள் உடல் நல குறைபாட்டால் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பேட்டி ஒன்றில் பங்கேற்று சிம்பு ,கலைஞருடனான உறவு குறித்து பேசுகையில், கலைஞர் அவர்களுக்கு நான் மிகவும் செல்லம். அவருக்கு என்னை சிறு வயது முதலே தெரியும் என்பதால் அவரை, நான் ‘தாத்தா’ என்று தான் அழைப்பேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிம்பு, ‘வல்லவன்’ பட காலகட்டத்தின் போது கலைஞர் அவர்களிடம் தலையில் கொட்டு வாங்கியுள்லேன் என்று கூறியுள்ளார். சமீபத்தில் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த போது சிம்பு பேசுகையில் ‘என்னுடைய படத்தை பார்த்து விட்டு அதை பற்றி பல கருத்துக்களை சொல்வார். நான் ‘வல்லவன்’ படத்தை இயக்கி கொண்டிருந்த தருணம் அது, அப்போது என்னுடைய வீட்டிற்கு அவர் வந்தபோது ‘வல்லவன் ‘படத்தை எனக்கு போட்டுக்காட்டு என்று கேட்டார்.

vallavan

என்னால் அப்போது போட்டுக்காட்ட முடியாவில்லை. பின்னர் சிறுது நாட்கள் கழித்து அவரை ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்த போது அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் என் கன்னத்தில் பளார் என்று அடித்தார். பின்னர் என்னிடம் , அடுத்த முறை உன் படத்தை எனக்கு காண்பிக்காமல் இரு இன்னொரு கண்ணத்திலும் அரை விழுகும் என்று பாசமாக கூறினார், எனக்கோ, அவர் எப்படி அதை ஞாபாகம் வைத்து கேட்டார் என்று ஆச்சர்யமாக இருந்தது’ என்று கலைஞருடனான அந்த அழகிய தருணத்தை பகிர்ந்து கொண்டார்.

Advertisement