சிம்பு-நயன்தாரா லிப் லாக்.! இணையத்தில் லீக் ஆனது இப்படித்தான்.! பலவருட ரகசியம் சொன்ன சிம்பு.!

0
811
Simbu

சிம்புவிற்கு சர்ச்சைக்கும் என்றுமே பஞ்சாமிருந்தது இல்லை. நயன்தாரா உடனான காதல் தொடங்கி சமீபத்தில் வெளியான பீப் சாங் வரை பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார் சிம்பு. அதுவும் நடிகர் சிம்பு இயக்கிய ‘வல்லவன்’ படத்தின் கால கட்டத்தின் போது தன பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார்.

nayanthara-and-shimpu

கடந்த 2006 ஆம் ஆண்டு சிம்பு இயக்கிய இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் நடிகர் சிம்பு, நடிகை நயன்தாராவின் உதடை பல்லால் இழுக்கும் ஒரு காட்சி இருந்தது. அப்போது அந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு ஏற்றார் போல நடிகர் சிம்புவும், நயன்தாராவும் காதலித்துக் கொண்டிருந்தனர்.

அந்த சமயம் நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் படுக்கையறையில் மிகவும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் சிம்புவே இந்த புகைப்படத்தை வெளியிட்டு விட்டார் என்று பல்வேறு விமர்சங்களும் எழுந்தது.

Simbu-Actor

இந்நிலையில் இத்தனை ஆண்டு கழித்து இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார் நடிகர் சிம்பு, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிம்பு இதுகுறித்து தெரிவிக்கையில் ‘நான் துபாயின் புது கேமரா வாங்கிய போது அந்த புகைப்படம் எடுத்தோம், ஆனால், அதை எனக்கு தெரியாமல் இணையத்தில் வெளியிட்டுவிட்டனர். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது, என்னால் ஒரு பெண் பெயர் கெடுகின்றதே என்று அப்போது நான் மிகவும் வருத்தப்பட்டேன், நான் எந்த பெண்ணிடமும் அவர்கள் அனுமதியில்லாமல் தொட்டது கூட இல்லை. அப்படி இருக்க நான் ஏன் அந்த புகைப்படத்தை வெளியிடவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.