மா.கா.பா மற்றும் நடுவர்களால் அசிங்கப்படுத்தப்பட்ட ப்ரியங்கா ! சிம்பு செய்த செயல்

0
1213

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 6. இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர்களான மா.கா. பாவும், பிரியங்காவும் தொகுத்து வழங்கி வந்துள்ளனர்.

Actor simbu

- Advertisement -

தொகுப்பாளர் பிரியங்கா கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இவரது வித்யாசமான சிரிப்பிற்க்கு பல ரசிகர்களும் உண்டு. பொதுவாக தொகுப்பாளர்கள் என்றாலே ஒருவரை ஒருவர் கலாய்த்தும்,கிண்டலடித்துகொள்வதும் வழக்கமான விஷயம் தான். அதிலும் மா. கா. பா வை சொல்லவே தேவையில்லை,ஆனால் சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் பகுதி ஒன்றில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அப்போது வழக்கம் போல பிரியங்காவை நடுவர்களும் மா.கா.பா வும் பிரியங்காவை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் ப்ரியங்காவை பற்றிய ஒரு வீடியோ போடப்பட்டது அதில் பிரியங்கா அருகில் யார் நின்றாலும் அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடுவார்கள் அல்லது (danger zone)டேஞ்ஞர் சொன் சென்று விடுவார்கள் என்று காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைவரும் பிரியங்காவை கிண்டல் செய்தனர்.

-விளம்பரம்-

vj priyanka

ஆனால் இறுதியில் சிம்பு பிரியங்காவை எவ்வளவு கிண்டல் செய்தாலும் அதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டதை பாராட்டினார். மேலும் மேடைக்கு வந்து பிரியங்கா அருகில் நான் நிற்கின்றேன் முடிந்தால் என்னை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றுங்கள் பார்ப்போம் என்று விளையாட்டாக கூறினார்.

Advertisement