சிம்புவின் வீட்டு பொருட்களை ஜப்தி செய்யுங்கள்.! ஐகோர்ட் உத்தரவு.!

0
741
imbu
- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் நடிகர் சிம்பு, அதுவும் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவர் மீது பல அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துள்ளனர். நடிகர் சிம்பு தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம் படத்தில் ” நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் சிம்பு. இந்நிலையில் நடிகர் சிம்பு மீது “அரசன் ” என்ற படத்தில் நடிப்பதாக முன் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது

- Advertisement -

sim

சமீபத்தில் பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் என்ற சினிமா பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று நடிகர் சிம்பு மீது சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில், நடிகர் சிம்புவை வைத்து “அரசன்” என்ற படத்தை எடுக்க அவருடன் ஒப்பந்தம் போடப்பட்டது . அந்த படத்தில் நடிக்க நடிகர் சிம்புவிற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.

-விளம்பரம்-

அதற்காக அவருக்கு முன் பணமாக 50 லட்ச ரூபாய் பணத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கப்பட்டது.ஆனால், ஒப்பந்தம் செய்படி நடிகர் சிம்பு அந்த படத்தில் நடிக்காமல்இழுத்தடித்து வருகிறார். இதனால் எங்களுக்கு ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சிம்புவை பணத்தை திரும்ப அளிக்க உத்தரவிடுமாறு அந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

Simbu-Actor

இதனை வழக்கில் சிம்பு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் முன் பண தொகையை திருப்பித்தர இயலவில்லை என்றும் வாதாடப்பட்டது.ஆனால், இதனை ஏற்கமறுத்த நீதிபதி, முன்பணமாக வாங்கிய 50 லட்சத்தை 35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சத்தை இன்னும் 4 வாரத்தில் திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அப்படி அளிக்கமுடியா பட்சத்தில் சிம்புவின் கார், தொலைபேசி, வீட்டு உபயோக பொருட்களை ஜப்தி செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement