இத்தனை லட்ச ரூபாய் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் செலுத்த வேண்டும் – புதிய சர்ச்சையில் சிக்கிய சிம்பு

0
249
simbu
- Advertisement -

சாலையின் குறுக்கே சென்றவர் மீது நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்திரன் கார் ஏறியதால் சம்பவ இடத்திலேயே அநியாயமாக அந்த நபர் உயிரிழந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகள் சங்கம் இழப்பீடு கோரியுள்ளது . தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் டி ராஜேந்தர். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர், நடிகர், இசை கலைஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். அதோடு டி ராஜேந்தர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு பல திறமைகளைக் கொண்டவர். மேலும், டி ராஜேந்தர் அவர்கள் திரை உலகில் பல சாதனைகளை செய்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் தவழ்ந்தபடி முனுசாமி என்ற 50 வயதுடைய நபர் சாலையை கடக்க முயன்றார். இவர் தனியார் நிறுவன காவலாளி ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் தான் அவர் தவழ்ந்தபடி சாலையை கடக்க முயன்றிருக்கிறார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த டி ராஜேந்திரனின் சொந்தமான கார் ஒன்று அவர் மீது ஏறி உள்ளது.

- Advertisement -

சிம்பு கார் ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்து :

அந்த நபர் சம்பவ இடத்திலேயே படு காயங்களுடன் அநியாயமாக உயிர் இழந்து உள்ளார். மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்த போது காரில் டி ராஜேந்திரன் குடும்பத்தினர் இருந்ததாகவும், விபத்தை ஏற்படுத்தியது டி ராஜேந்திரன் ஓட்டுநர் செல்வம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Simbu Hospitalized | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிம்பு

அநியாயமாக உயிர் இழந்த முதியவர்:

மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் செல்வம் மீது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சிம்பு மற்றும் டி ராஜேந்தர் தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.

-விளம்பரம்-

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை :

இப்படி ஒரு நிலையில் விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளிக்கு குடும்பம் இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு நடிகர் சிம்பு, 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’ என மாற்று திறனாளிகள் நலச் சங்கம் கோரியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளி சங்க பொதுச் செயலளர் நம்புராஜன் கூறியுள்ளது, அலட்சியத்தால் மரணம் பிரிவில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஓட்டுனர் செல்வத்தை சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.

This image has an empty alt attribute; its file name is 1-484.jpg

50 லட்சம் இழப்பீடு :

ஒரு உயிர் கொல்லப்பட்டதற்கு இதுதான் தண்டனையா? எனவே, நடிகர் சிம்பு காரால் பலியான மாற்றுத் திறனாளியை, சிம்பு குடும்பத்தார் மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். அவருக்கு குடும்பம் இல்லாததால், இந்த பலிக்கு அபராதமாக, 50 லட்சம் ரூபாயை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

Advertisement