‘என்ன நீங்க பாத்துக்கோங்க’ – மாநாடு படத்தின் பிரெஸ் மீட்டில் அழுத சிம்பு. வைரலாகும் வீடியோ.

0
412
simbu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிலம்பரசன். இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், இவரை தென்னிந்திய சினிமாவின் சர்ச்சை நாயகன் என்றும் சொல்வார்கள்.

-விளம்பரம்-

ஏனென்றால், அந்த அளவிற்கு இவரை குறித்து சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களும் வதந்திகளும் வந்தவண்ணம் இருக்கும். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.

- Advertisement -

பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆகவே ரொம்ப நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாநாடு படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடந்துள்ளது. இதில் சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது மேடையில் சிம்பு அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த போது திடீரென மனமுடைந்து கண்கலங்கி உள்ளார். பின் அவர் விழாவில் கூறியது, நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து உள்ளேன். அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் கூறியுள்ளார். தற்போது நடிகர் சிம்பு கண்கலங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement