மெர்சலை மிஞ்சும் சிம்புவின் பாடல் வரிகள்! சிம்புவிற்கு வாயிலதான் சனி ?

0
1075
simbu

மத்திய பா.ஜ.க அரசினால் டீமானிடைசேசன் செய்யப்பட்டு தற்போது வரை 1 வருடம் ஆகிறது. இந்த டீமானிடைசேசன் ஒரு தவறான ஒன்று என மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
simbu மேலும், மாதக்கணக்கில் அந்த முடிவின் தாக்கம் மக்களை மிகவும் பாதித்தது. கோடிக்கணக்கில் மக்கள் ஏ.டி.எம் வாசலில் நாட்கணக்கில் நின்றிருந்தனர். இதனை மையாக வைத்து சிம்பு ஒரு படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் மக்கள் மனதை பிரதிபலிப்பதாகவே உள்ளது.

ஆனால், தற்போது இந்த பாடலின் வரிகள் பாரதிய ஜனதா கட்சியினரை குறிவைத்து தாக்கி சிம்பு பாடியுள்ளார் என அந்த கட்சியினர் அவரது வீட்டின் முன் ஆர்ப்பட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வந்ததை அடுத்து சிம்பு வீட்டிற்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
simbuஇது குறித்து பேசிய சிம்பு தான் யாரயும் நோகடித்து தாக்கியும் பாடவில்லை.

ஒரு படத்திற்க்காக ஒரு பாடகனாக இந்த பாடலை பாடியுள்ளேன் அவ்வளவு தான். இதனை நான் தயாரிக்கவோ இயக்கவோ இல்லை. இந்த பாடல் வரிகளை நான் எழுதவும் இல்லை. யாரையாவது சங்கடப்படுத்தும் வகையில் இந்த பாடல் இருந்தல் நான் அதற்கு மன்னிப்பு கேட்கவும் தயார். அவர்களது கருத்தினை பாடலாக கூறியுள்ளனர்.எனக் விளக்கம் அளித்துள்ளார் சிம்பு