சிம்புவின் பிரம்மாண்ட பட வாய்ப்பை நாசமாக்கிய நயன்.! இது தான் லேடி சூப்பர் ஸ்டாரா.!

0
647
Simbu-nayan

தமிழ் சினிமாவின் சிம்பு மற்றும் நயன்தாராவின் காதல் கதை பற்றி அனைவரும் அறிவோம். சிம்புவுடன் பிரேக் அப் செய்த பின்னர் பிரபு தேவா, விக்னேஷ் சிவன் என்று காதலரை மாற்றி வந்தார் நயன். ஆனால், தற்போது விக்னேஷ் சிவனுடனான காதல் நிச்சயதார்த்தம் வரை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Related image

இந்நிலையில் பிரமாண்ட படமொன்றிலிருந்து நயன்தாரா வால் சிம்பு விலகிய தகவல் கசிந்திருக்கிறது. சுமார் ரூ 800 கோடியிலிருந்து ஆயிரம் கோடி செலவில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார் மணிரத்னம். இதில் விஜய், விக்ரம், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, சத்யராஜ், அமிதாப்பச்சன், ஐஸ்வர் யாராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

- Advertisement -

இதே படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க மணிரத்னம் முயன்றார். அப்போது நயன்தாரா, ‘சிம்பு இப்படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்’ என்று இயக்குனரிடம் கண்டிஷன் போட்டாராம். இந்த தகவல் மணிரத்னம் தரப்பிலிருந்து சிம்புவுக்கு தெரியவர, படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என்று சிம்பு ஜென்ட்டிலாக விலகி விட்டாராம்.

சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் காதலை பிரேக் அப் செய்து கொண்ட பல ஆண்டுகள் கழித்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். ஆனால், அந்த சமயத்தில் நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து இல்லை. எனவே, தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற மமதையில் சிம்புவுடன் நயன்தாரா நடிக்க மறுத்துள்ளார் என்று பலரும் நயன்தாராவை கடிந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement