நீ அழிக்க வந்த அசுரன்னா, நானு – தனுஷை தாக்கி பன்ஞ் வசனத்துடன் வெளியான ஈஸ்வரன் பட ட்ரைலர்.

0
5511
eeswaran
- Advertisement -

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிம்பு. இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது. நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர். செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

-விளம்பரம்-

இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். இதனிடையே சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்குள்ளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பே நிறைவடைந்துவிட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

- Advertisement -

தமன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்கிறார். ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியாவின் 5-வதாக தயாரிப்பாக‘ஈஸ்வரன்’ படம் உருவாகியுள்ளது.  திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மாதம் தொடங்கிய ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவடைந்தது. மேலும் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் சிலம்பரசன் மகிழ்வித்தார்.

இந்த படத்தின் டீசரை கடந்த நவம்பர் 14 காலை 4.32 மணிக்கு பிரம்ம முகுர்த்தத்தில் வெளியிட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் இறுதியில் நீ அழிக்க வந்த அசுரன்னா, நான் காக்க வந்த ஈஸ்வரன்டா என்று வரும் வசனத்தை கண்டு பலரும் இது தனுஷிக்குகாக வைத்த வசனம் போல இருக்கிறது என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement