மாஸ்டரையே விட்டு வைக்கல ஈஸ்வரனை விட்டு வைப்பாரு – வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

0
1348
ees
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இந்த விமர்சனம் மூலமாக அதிக அளவு பிரபலமாகி தன்னுடைய கனவு நினைவாகி விட்டது என்று நினைத்துக் கொண்டு உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் அவருடைய பட விமர்சனங்கள் அதிக அளவில் மாஸ் கொடுத்தன.

இதையும் பாருங்க : அட, ரம்யா பாண்டியனின் அக்காவும் நடிகை தானா. அதுவும் இந்த பிக் பாஸ் பிரபலத்தோடு நடிச்சிருக்காங்க.

- Advertisement -

அவ்வளவு ஏன் இவரது விமர்சனங்களை பார்த்து பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று பலரும் கடுப்பில் தான் இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களையும் விமர்சித்து உள்ளார் மாறன். இதில் மாஸ்டர் படத்தை ஏற்கனவே விமர்சனம் என்ற பெயரில் கழுவி ஊற்றி இருந்த நிலையில் தற்போது ஈஸ்வரன் படத்தை கழுவி ஊற்றியுள்ளார்.

அதில் சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வந்து படத்தை முடித்து கொடுத்ததற்கு ஒரு மிகப்பெரிய பாராட்டு. இந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு அஞ்சு ஆறுதடவ நான் அழுதுட்டேன். முதலில் படத்தில் சிம்பு உழைப்பு வீனா போச்சேன்னு அழுதேன். அதுக்கு அப்புறம் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளரை நெனச்சி அழுதேன். அப்புறம் விநியோகிஸ்தர்கள் குறித்து அழுதேன். அப்புறம் இயக்குனரை பற்றி அழுதேன். ஆனால், கடைசியா தான் தெரிஞ்சது. நாம வந்து பாத்துட்டு இப்படி அழுகிறோமே என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement