ஒன்னும் மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோங்க – ரெட் கார்ட் நீக்கப்பட்ட பின் சிம்பு போட்ட ட்வீட் வைரல்.

0
3435
simbu
- Advertisement -

சிம்பு படத்திற்கு விதைக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிம்பு போட்டுள்ள ட்விட்டர் பதிவு பெரும் வைரலாகி வருகிறது. கெளதம் மேனன் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும்  ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஆரம்பத்திலேயே பெரிய பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் கௌதம் மேனன் பிறந்தநாளில் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அப்போது  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’  என்று தான் டைட்டில் வைத்தனர். ஆனால், இந்த டைட்டில் கொஞ்சம் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருந்தது.

-விளம்பரம்-
சிம்பு - கெளதம் மேனன் இணையும் வெந்து தணிந்தது காடு | simbu and gauthem  menon join hands for Vendhu Thanindhathu Kaadu - hindutamil.in

இதனால் இந்த படத்தின் டைட்டிலை ‘வெந்து தணிந்த காடு’ என்று மாற்றி கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.இப்படி ஒரு நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தை திட்டமிட்டு இருந்த  ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு படம் பண்ணுவதாக பேசிவிட்டு, இப்போது இந்தக் கூட்டணி வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் பண்ணுகிறார்கள் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்கொடுத்திருந்தார்.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க ‘AAA’ படத்தின் நஷ்ட ஈட்டை சிம்பு கொடுக்கவேண்டும். அதை கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்கிறார்” என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனால் சிம்புவின் படத்தில் Fefsi யூனியன் ஊழியர்கள் பணிபுரிய மாட்டார்கள் என்றும் சிம்பு படத்திற்கு ரெட் கார்டும் கொடுக்கப்பட்டது.

தற்போது இரு தரப்பும் அமர்ந்து பேசி சுமுக தீர்வை எட்டியுள்ளனர். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் மூலம் இதற்கான தீர்வை எட்ட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, சிம்புவிற்கு விதிக்கப்பட்ட தடையானது நீக்கப்பட்டுள்ளது. 

-விளம்பரம்-

இதனால் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்புகள் இனி பிரச்சனை இல்லாமல் துவங்கும் என்று படக்குழு நிம்மதியடைந்து. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ட்வீட் போட்டுள்ள சிம்பு, எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், இருண்ட இரவுகளுக்குப் பிறகும் பிரகாசமான ஒளி இருக்கிறது. நன்றி இறைவா என்று கூறிப்பிட்டு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

Advertisement