விராட் கோலி உடனான சந்திப்பு பற்றி நடிகர் சிம்பு அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்த சிம்பு நடித்த மாநாடு படம் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
சிம்பு திரைப்பயணம்:
இதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். தற்போது சிம்பு நடித்து உள்ள படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது.

தக் லைஃப் படம் :
இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சிம்பு, விராட் கோலி உடனான சந்திப்பு பற்றி பகிர்ந்திருக்கிறார்.
சிம்பு பேட்டி:
அதில் அவர், நான் விராட் தான் அடுத்த சச்சின் என்று கணித்து என்னுடைய நண்பர்களிடம் பேசி இருந்தேன்.
ஆனால் சிலர், அவர் இரண்டு வருடங்கள் தான் தாக்கு பிடிப்பார் என்று சொன்னார்கள். அதற்குப் பின்னால் விராட் பெரிய இடத்திற்கு வந்தார். ஒருமுறை அவரை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. நான் சொன்ன பையன் இன்று இவ்வளவு பெரிய ஆளாகியிருக்கிறான். கொஞ்சம் ஜாலியாக போய் அவரிடம் பேசலாம் என்று போய் ஹாய் சொன்னேன். உடனே அவர், நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு நான், சிம்பு என்று சொன்னேன். அதற்கு விராட், எனக்கு உங்களை தெரியவில்லை என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார்.
View this post on Instagram
விராட் கோலி பற்றி சொன்னது:
எனக்கு ஒரே அசிங்கமாக போய்விட்டது. ஒரு நாள் நான் யார் என்று உங்களுக்கு தெரிய வரும். அன்னைக்கு பார்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர், என்னுடைய பத்துதல படத்தில் வரும் நீ சிங்கம் தான் என்ற பாடல் பிடிக்கும் என்று சொல்லி இருந்தார். அதுவே எனக்கு மிகப்பெரிய வெற்றி. ஆனால், இப்பவும் அவருக்கு என்னை தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவர் என்னுடைய பாட்டை சொன்னது எனக்கு சந்தோஷம். அந்த சந்திப்பு சம்பவத்தை என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார்.






