சிம்பு படத்தில் முதன்முறையாக இசையமைக்கபோகும் இளம் இசையமைப்பாளர்.!

0
267
str-2

தமிழ் சினிமாவின் யங் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் சிம்பு, தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். அதுபோக முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு.

str

இந்நிலையில் இந்த இரு படத்திற்கு பின்னர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று லைகா நிறுவனம் சமீபத்தில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர் யார் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளராக ஹிப் ஆப் ஆதியை நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

str 1

இளம் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி, சுந்தர் சி இயக்கிய பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், சிம்புவின் படத்திற்கு இதுவரை ஆதி இசையமைத்ததே இல்லை. ஒருவேளை சுந்தர் சி இயக்கவிருக்கும் படத்தில் ஆதி இசையமைப்பாளராக கமிட்டானால், அது சிம்பு நடிக்கும் படத்திற்கு ஆதி இசையமைக்கும் முதல் படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.