சிம்பு, சுந்தர்.சி இணையும் அடுத்த படத்தின் நடிகை இவர் தான்.! அதிகாரப்பூர்வ தகவல்

0
1297
- Advertisement -

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் சிம்பு, தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். அதுபோக முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு.

-விளம்பரம்-

- Advertisement -

இந்நிலையில் இந்த இரு படத்திற்கு பின்னர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று லைகா நிறுவனம் சமீபத்தில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர் யார் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை “மேகா ஆகாஷ்” ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Actress_Megha_Akash

22 வயதே ஆனா நடிகை மேகா ஆகாஷ் தற்போது நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்ட ‘ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சுந்தர் சி- சிம்பு படத்தில் இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்க படுகிறது என்ற ஒரு செய்தியும் பரவி வருகிறது.

Advertisement