சிம்புவின் புதிய படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்..! இயக்குனர், ஹீரோயின் இவங்கதான்..!

0
466
Simbu
- Advertisement -

கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார் நடிகர் சிம்பு. தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். அதுபோக முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் வெங்கட் பிரபுவிற்கு அடுத்து இயக்குனர் சுந்தர்சியின் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

Actor simbu

- Advertisement -

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ள “எனை நோக்கி பாயும் தோட்ட” படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மேகா ஆகாஷ் தான் சிம்பு படத்திலும் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப் ஆப் ஆதி இசையமைக்கயுள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று லைக்கா நிறுவத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் துவங்கபட்டுள்ளது.

-விளம்பரம்-

Sundar c

15 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த படப்பிடிப்பில் சண்டை மற்றும் பாடல் காட்சிகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் நாயகி மேகா ஆகாஷ் கலந்துகொள்ளவில்லை. எனவே, சிம்புவின் காட்சிகள் மட்டும் படமாக்கபடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Actress_Megha_Akash

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரிண்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரிமேக்கில் சிம்பு நடிக்கும் படத்தை தான் சுந்தர் சி இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘அத்தாரிண்டிகி தாரேதி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது கூடுதல் தகவல்.

Advertisement