எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று சிம்பு எடுத்திருக்கும் அதிரடி முடிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். அதன் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மாநாடு படம்:
அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தர். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே. சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
சிம்பு நடிக்கும் படம்:
இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாகி இருந்த படம் மகா. இந்த படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. இதை அடுத்து ஆகஸ்ட் மாதம் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. அதேபோல் இந்த படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கிறார்.
பத்து தல படம்:
இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தை இயக்குனர் நார்தன் மற்றும் இயக்குனர் கிருஷ்ணன் இயக்குகிறார்கள். இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஞானவேல் ராஜா தன்னுடைய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்து இருக்கிறது. இந்த நிலையில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சிம்பு கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பரங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.
சிம்புவின் அதிரடி முடிவு:
அதிலும் சமீபகாலமாக நடிகைகள் அதிகமாக மது தயாரிப்பு நிறுவன விளம்பரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முன்னணி மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று சிம்புவை தங்களுடைய விளம்பரத்தில் நடிக்க சொல்லி கேட்டிருந்தார்கள். அதற்கு கோடி ரூபாய் பணம் கொடுப்பதாக கூறி இருந்தார்கள். ஆனால், சிம்பு அவர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் நான் மது விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார். சிம்புவின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது