நரைத்த தாடி, மெலிந்த உடல் – சிகிச்சைக்கு பின் TR எப்படி ஆகிட்டார். சிம்பு மருத்துவமனையில் இருந்து சிம்பு வெளியிட்ட புகைப்படம்

0
390
Tr
- Advertisement -

உடல்நலக்குறைவால் டி ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் டி ராஜேந்தர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர், இசை கலைஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். அதோடு டி ராஜேந்தர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு பல திறமைகளைக் கொண்டவர்.

-விளம்பரம்-

சமீப காலமாக படம் இயக்குவதை நிறுத்திய டி ராஜேந்திரன் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த கவண் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் பாடல் பாடியும் வந்தார். தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் டி ராஜேந்திரன் அவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார்.

- Advertisement -

டி ராஜேந்தரின் உடல் நிலை:

இந்த நிலையில் டி ராஜேந்தர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் டி ராஜேந்தர் அவர்கள் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும், மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிராத்தனை செய்யும் ரசிகர்கள்:

தற்போது இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் டி ராஜேந்திரன் கூடிய விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். “டி.ராஜேந்தர் மகன், மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. சிம்பிற்குப் பல ஆண்டுகளாகப் பெண் பார்த்து வருகிறார்கள் என்பதும் அறிந்ததே! இந்நிலையில் டி.ஆர். தனது பேரன் பேத்திகளை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளிநாடு அழைத்துச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தார். அதை சிம்புவிடமும் சொல்ல, அவர் ‘ஃபேமிலி ட்ரிப்பாகவே போய் வருவோம்’ எனச் சொன்னதுடன் அமெரிக்கா டூருக்கும் ஏற்பாடுகள் செய்துவந்தார்.

-விளம்பரம்-

சிம்பு வெளியிட்ட அறிக்கை :

இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் உடல் நலன் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுஇருந்தார். அதில் ‘எனது ஆரூயிர் ரசிகர்களுக்கும் அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.

தந்தையின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு.

அவர் முழு சுயநினைவுடன், நலமாக இருக்கிறார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி என சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்இருந்தார். இதனால் டி ராஜேந்திரன் விரைவில் குணமடைந்து வர பிரார்த்தனை செய்தனர். இப்படி ஒரு நிலையில் மருத்துவமனையில் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சிம்பு வெளியிட்டு இருக்கிறார். அதில் நரைத்த தாடியுடன் உடல் மெலிந்து காணப்படுகிறார் டி ஆர்.


Advertisement