ஒரு வாரமாக இது பற்றி வாய் திறக்காத சிம்பு தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார். மேலும், இது குறித்து இன்று (நவ்.06) சக்க போடு போடுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசப்போவதாக கூறியுள்ளார் சிம்பு. இதற்காக அந்த விழாவிற்கு நடிகர் தனுசையும் அழைத்துள்ளார்.
மேலும், இது குறித்து பேசிய சிம்பு:
மைக்கேல் ராயப்பன் யார் தூண்டுதலில் இப்படி பேசுகிறார் எனத் தெரியும். படம் வெளியாகி 6 மாதம் கழித்து இப்படி என்னை இழிவுபடுத்துவதான் நோக்கம் என்ன.? அப்படியே இது குறித்து பேசினாலும், சங்கத்தில் வைத்து முறையாக பேசி முடித்திருக்கலாம். ஆனால், நேரடியாக ஊடங்களுக்கு பேட்டி கொடுப்பதன் நோக்கம் என்ன?
சிம்பு பணத்திற்காக இப்படி செய்துவிட்டான் என்று சொன்னால் யார் நண்புவார்கள்.? ஜனவரி 20ஆம் தேதி முதல், மணி சார் (மணிரத்னம்) படத்தில் நடிக்க போகிறேன். முடிந்ததை செய்துகொள்ளட்டும். 3 மாதத்தில் இந்த படத்தை முடித்து கொடுக்கப் போகிறேன். இதை யாராலும் தடுக்க முடியாது.
அதுவும் பாத்ரூமில் இருந்து யாராவது டப்பிங் செய்து கொடுப்பார்களா? இதை மட்டும் என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை
என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிம்பு.




