மாநாடு படத்தின் மாஸ் காட்சி – 5 நிமிடம் சிங்கிள் டேக்கில் நடித்துள்ள சிம்பு, சிலிர்த்து போய்யுள்ள பட குழு. வைரல் வீடியோ.

0
585
maanaadu
- Advertisement -

மாநாடு படத்தில் நடிகர் சிம்பு சிங்கிள் டேக்கில் நடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், நடுவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மாநாடு மாபெரும் :

அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் மிரட்டி இருக்கிறார்கள்.

- Advertisement -

வித்யாசமான கான்சப்ட் :

மேலும், ஒரு நாளுக்குள் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் அதே நாளில் சிம்பு பயணம் செய்கிறார் . இதனை ஒரு கட்டத்தில் தெளிவாகப் புரிந்து கொண்ட சிம்பு எப்படி அதை கையாளுகிறார் என்பது தான் படத்தின் கதை. ஒரு புத்தம் புதிய வித்தியாசமான கதைக்களத்துடன் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் சிம்பு. எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான டைம் லூப் கான்செப்ட்டை கொண்டு படமாக்கியிருக்கிறார்.

சிங்கிள் டேக்கில் அசத்தியுள்ள சிம்பு :

மேலும், படத்தில் அரசியல் மூலம் மத கலவரத்தை எந்த அளவிற்கு ஆழமாக பிரச்சனை செய்யலாம் என்பதை இயக்குனர் அழகாக சொல்லியிருக்கிறார். திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

5 நிமிட காட்சி :

இது ஒரு பக்கம் இருக்க பொதுவாகவே சிம்பு ஒரே டேக்கில் அருமையாக காட்சிகளில் நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுகுறித்து சிம்புவே பல மேடைகளில் பேசி இருக்கிறார். இந்நிலையில் சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் ஒரே டேக்கில் 5 நிமிடம் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அந்த காட்சி குறித்து ரசிகர்களும் பயங்கரமாக பாராட்டி இருந்தார்கள்.

வைரலாகும் மேக்கிங் வீடியோ :

தற்போது அந்த காட்சி வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளார்கள். இதை சிம்பு ரசிகர்கள் அனைவரும் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பத்து தல படத்திலும் நடித்து வருகிறார். இது ‘மப்டி’ படத்தின் ரீ – மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement