புதுமண தம்பதிகளான மதன் – ரேஷ்மாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு. வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் பல்வேறு நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த பல நடிகர் நடிகைகள் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கின்றனர் மதன் மற்றும் ரேஷ்மா ஜோடி. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சுடவா ‘ தொடர் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த ரேஷ்மா, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். இந்த நிலையில் நடிகை ரேஷ்மா ‘கனா காணும்’ சீரியல் மூலம் பிரபலமான மதன் மீது காதலில் விழுந்தார்.
இதையும் பாருங்க : அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய கமல் மருத்துவமனையில் அனுமதி – அப்போ இந்த வாரம் பிக் பாஸ் நிலை ?
இவர்கள் இருவரும் கடந்த ஜனவரியில் தான் தங்கள் காதலை அறிவித்து இருந்தார்கள். தற்போது இவர்கள் இருவருமே ‘அபி டைலர்’ என்ற தொடரில் நடித்து வருகின்றனர். ரீல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் தற்போது ரியல் ஜோடியாக மாறி இருக்கின்றனர். இவர்கள் திருமணம் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பல்வேறு சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் மதன் மற்றும் ரேஸ்மாவிற்கு நடிகர் சிம்பு வீடியோ கால் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நடிகர் மதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தலைவன் எங்களுக்கு வாழ்த்து சொன்ன தருணம் என்று கூறியுள்ளார்.