நானே மகத் சட்டையைப் பிடிச்சு கேள்வி கேட்பேன்.! மகத்தின் அத்துமீறலுக்கு சிம்பு பதிலடி.!

0
266
mahat-BiggBoss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகர் மஹத் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அனைவர் முன்பும் முத்தமிட்டு கொள்வது,கட்டிபிடித்துகொள்வது என்று செய்யும் பல்வேறு அத்துமீறல்கள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. இந்நிலையில் மஹத் மற்றும் யாஷிகா நடந்துகொள்ளும் விதம் குறித்து நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார்.

Yashika-mahat

நடிகர் சிம்புவும், மஹத்தும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிம்புவிடம், பார்வையாளர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அதில் பங்குபெற்றுள்ள அவரது நண்பர் மஹத் குறித்தும் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சிம்பு “அவனே ஓப்பனா இருக்கான், அதான் உங்க பிரச்சன..பிரச்சன என்னனா அவன் ஓப்பனா இருக்குறது பிரச்சனையா இருக்கு..இதுல அவனுக்கு கேர்ள் ப்ரண்டு வேற இருக்குனு சொல்ராங்க. கரெக்ட் தா, உனக்கு கேர்ள் ப்ரண்டு இருக்கும் போது இன்னொரு பொண்ண தொட்டா உன் கேர்ள் ப்ரண்டு, உன்ன காதுமேலயே அடிப்பா.

ஆனா,அவனோடோ கேர்ள் ப்ரண்டு எதுவும் சொல்லமாட்டுது, அந்த பொன்னும் (யாஷிகா) எதுவும் சொல்லமாட்டுது. ஒரு பிடிக்குதா பொண்ண போய் கைய புடிச்சி இழுத்தா தான் அது தப்பு. அவன் பொண்ணுங்ககிட்ட நெருக்கமாக இருக்கறது ஒன்னும் தப்பு இல்ல. அதே போல ஒருவேலை மஹத் தப்பு செஞ்சா அவனை நான் சட்டையை பிடிச்சி கேட்பேன் ” என்று கூறியுள்ளார். ஏற்கனவே, மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா, சில நாட்களுக்கு முன்னர் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்தபோது மஹத் மற்றும் யாஷியா குறித்துமுகநூல்வாசி ஒருவர் கேள்விகேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பிரச்சி மிஸ்ரா, ‘அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்,மஹத் செய்வது தவறு என்று யாஷிகா கூறினால் தான் பிரசச்னை. ஆனால், அவர் அவ்வாறு கூறவில்லை. மஹத் எப்போது இப்படி தான் அனைவரிடமும் காமெடியாக இருப்பார்’ என்று தெரிவித்திருந்தார்.

Mahat

மஹத் மற்றும் யாஷிகா செய்யும் சில அநாகரீக செயல்கள் மஹத்தின் காதலிக்கோ அல்லது அவரது நண்பரான நடிகர் சிம்புவிற்கோ சாதாரணமாக விடயமாக இருக்கலாம். ஆனால், அதனை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மஹத் மற்றும் யாஷிகா நட்பாக தான் பழகி வருகிறார்கள் என்று தோன்றவில்லை. இவர்கள் இருவரும் செய்யும் செயல்கள் பார்ப்பவர்களுக்கு ரசிக்கும்படி இல்லாமல் எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை..