தன் வருங்கால மனைவிக்காக புதிய வீடு – அதுவும் எங்க தெரியுமா ? அப்போ விரைவில் டும் டும் டும் தான்.

0
565
Simbu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இருந்தாலும் சிம்பு என்றாலே சர்ச்சை மன்னன் என்று சினிமா துறையில் சொல்லும் அளவிற்கு பல பிரச்சினைகள் கிளம்பி இருக்கிறது. தற்போது தான் அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். ஆனால், அவர் அமைதியாக இருந்தாலும் இந்த சர்ச்சைகள் அவரை விடாமல் துரத்துகின்றன.

-விளம்பரம்-
நடிகர் சிம்புவிற்காக என்ன வேணாலும் செய்யும் நடிகை" - அட அம்மிணி சிம்பு  வீட்டிலேயே தங்கிட்டாங்கலாமா!! வெளிவந்த புகைப்படம்!! உறைந்துபோன ...

ஏதாவது ஒரு பிரச்சினையில் எப்படியாவது சிம்புவின் பெயர் வந்துவிடுகிறது. இருந்தும் சிம்பு அதை கண்டு கொள்ளாமல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை நிதி அகர்வால் உடன் சிம்பு லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும் சமீபத்தில் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. நிதி அகர்வால்- சிம்பு இருவரும் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

நிதி அகர்வால் உடன் சிம்பு:

இதற்கு முன் நிதி அகர்வால் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஈஸ்வரன் படத்திற்கு பிறகு தான் நிதி அகர்வால் உடன் சிம்பு லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. வழக்கம்போல சிம்பு இதைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

ரசிகர்களுக்கு நடிகை நிதி அகர்வால் காட்டிய தாராளம்.. ரசிகர்களை கவர்ந்த சிம்புவின்  நடிகை .. - விடுப்பு.கொம்

சிம்புவுக்கு பார்த்த பெண்:

பொதுவாகவே சோசியல் மீடியாவில் சிம்பு உடைய செய்தி வந்தாலே போதும் அதை காட்டு தீ போல பரப்பி விடுவார்கள். அப்படித்தான் நிதி அகர்வால்- சிம்பு உடைய செய்தி சோஷியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் பரவியிருந்தது.அதிலும் புதுமுக நடிகைகள் சினிமாவில் அறிமுகமானாலே அவர்களையும் சிம்புவையும் வைத்து ஏதாவது ஒரு சர்ச்சை வந்துவிடும். இதில் நிதி அகர்வால் மட்டும் என்ன விதிவிலக்கா?

-விளம்பரம்-

சர்ச்சையால் ஏற்பட்ட சிக்கல் :

இப்படி இருக்கும் நிலையில் சிம்புவுக்கு டிஆர் மற்றும் அவருடைய அம்மா உஷா இருவரும் சில ஆண்டுகளாகவே பெண் பார்த்து வருகிறார்கள். அப்படி இவர்கள் இருவரும் சேர்ந்து பெங்களூரில் ஒரு பெண் பார்த்து இருந்தார்கள். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று நிச்சயதார்த்தமும் விரைவில் நடப்பதாக இருந்தது என்று கூறப்பட்டது. தற்போது நிதி அகர்வால் உடன் சிம்பு உறவில் இருப்பதாக சோசியல் மீடியாவில் உலா வந்த செய்திகளால் சம்பந்தமே வேண்டாமென்று பெண் வீட்டில் சொல்லி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

simbu

சிம்புவின் புதிய வீடு :

எது இப்படியோ இந்த ஆண்டு முடிவுக்குள் சிம்புவிற்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று படு மும்மரமாக இருக்கிறாராம் சிம்புவின் தந்தை டிஆர். அதே போல தந்தை சொல் தட்டாத சிம்புவும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதனால் சென்னை Ecr பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்க திட்டமிட்டு இருக்கிறாராம் சிம்பு. தனக்கு வரப்போகும் மனைவிக்கு அந்த வீட்டை பரிசாக வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Advertisement