18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் த்ரிஷா மற்றும் சிம்ரன் ஒன்றாக தோன்ற இருக்கும் படம்.!

0
1183
Simran-thrisha
- Advertisement -

பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. 1999-ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் திரிஷா நடித்தது மிகவும் சின்ன வேடம். ஆனால் அதன் பின் கதாநாயகியாக அறிமுகமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

திருமணமாகி சினிமாவில் இருந்து ஒதுங்கிய சிம்ரன் சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்தார். பின்னர் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்தபடத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்‌‌ஷன் சாகச படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஜோடி படத்தில் தான் இவர்கள் இருவரையும் ஒரே திரையில் பார்க்க முடிந்தது. ஆனால், பேட்ட படத்தில் இவர்கள் இருவரும் நடித்த போதும் இவர்கள் இருவரும் இணைந்து காட்சியில் தோன்றாதது ரசிகர்களுக்கு சற்று குறையாக இருந்தது. ஆனால், அந்த குறை தற்போது இந்த படத்தின் மூலம் நிறைவடைய உள்ளது.

-விளம்பரம்-
Advertisement