அப்படி அந்த விளம்பரத்தில் வரும் ஒரு குட்டி பெண் குழந்தையை நம்மால் மறக்கவே முடியாது. அந்த விளம்பரத்தில் தன் தந்தை புகை பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவாள் அந்த பெண். தவறை உணர்ந்த அப்பா புகையிலையை தூக்கிப் போட்டுவிடுவார், அந்த சமயம் அந்த குட்டிப்பெண் அவரது அப்பாவை கட்டி அணைத்துக் கொள்வாள்.
இந்த காட்சியில் வரும் அந்த குட்டிப்பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 17 வயதே ஆன அந்த பெண்ணின் பெயர் "சிம்ரன் நடேகர்" அவர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறாராம். அது மட்டும் இன்றி அவர் ஒரு மாடலாகவும் வலம் வருகிறார் என கூறப்படுகிறது.




