நாம் திரையரங்குகளில் படம்பார்க்கும்போது ஆரம்பத்தில் சில விளம்பரங்கள் ஓடும்.அதில் எல்லாவற்றையும் நாம் எளிதாக எடுத்துக்கொள்வோம் ஆனால், ஒரே ஒரு விளம்பரத்தை மட்டும் குறிப்பாக இளைஞர்கள் அப்படி எடுத்துக்கொள்வதில்லை. அப்படி என்ன விளம்பரம்னு கேக்கிறிங்களா, அதுதாங்க புகையிலை விளம்பரம். புகை பிடித்தல் பற்றிய ஒரு விளம்பரம் எல்லா திரையரங்குகளிலும் கட்டாயமாக ஓடும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும்.

Advertisement

அப்படி அந்த விளம்பரத்தில் வரும் ஒரு குட்டி பெண் குழந்தையை நம்மால் மறக்கவே முடியாது. அந்த விளம்பரத்தில் தன் தந்தை புகை பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவாள் அந்த பெண். தவறை உணர்ந்த அப்பா புகையிலையை தூக்கிப் போட்டுவிடுவார், அந்த சமயம் அந்த குட்டிப்பெண் அவரது அப்பாவை கட்டி அணைத்துக் கொள்வாள்.

Advertisement

இந்த காட்சியில் வரும் அந்த குட்டிப்பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 17 வயதே ஆன அந்த பெண்ணின் பெயர் “சிம்ரன் நடேகர்” அவர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறாராம். அது மட்டும் இன்றி அவர் ஒரு மாடலாகவும் வலம் வருகிறார் என கூறப்படுகிறது.

Advertisement
Advertisement